அன்புடைய பைத்தியத்தின் புலம்பல்

காய்கறிகளில் செய்தான் கலப்பினம்...
அதனால், தேவைப்படுகிறது இரசாயண உரம்...
இதனாலேயே உணவிலெல்லாம் ஏறிவிட்டது விஷம்...
இனி எதைத் தின்று ஆரோக்கியமாய் வாழப்போகிறீர் நூறு வருடம்?...

விஷமமே உருவான நெஞ்சமே...
விஷத்தை விதைக்கும் உன் பகுத்தறிவில் இடி விழ, மின்னல் தாக்கி உன் துன்னுயிர் ஞாலம் விட்டு நீங்கவே, சித்தம் கொள்கிறது ஆர்வமே...
பாதையில் நான் வரக்கண்டு எதிர்வந்த அரவமும் விலகிச் செல்ல, விலகாது இன்னல் தரும் மனித பதர்களாலே இவ்வுலகமே கலகங்களுடைய நரகமே...

சிரிப்பு வருது சுயநலமே சிந்தனையாய் உருவான ஞான சூனியங்களை காணுகையில்.
இடைவிடாது சிரிக்கிறேன் அன்பில்லா துஷ்டர்களுக்கிடையே நானொரு பைத்தியமாய்..

இப்பைத்தியத்தின் புலம்பல்களின் அர்த்தம் உங்களில் எத்தனை பேர்க்கு புரிகிறது?
புரிந்தாலும் புரியாது,
உணர்ந்தாலும் உணராது,
வேடமிடும் கள்ளுளிமங்கராய் இன்னும் எத்தனை காலம் வாழப் போகிறீர்கள்??

அன்பே இயற்கை...
மற்றதெல்லாம் செயற்கை...
அன்பை உணர்ந்தவன் இயற்கை என்றும் அழியான்...
அன்பை உணராத மடையனோ இயற்கை அழித்து செயற்கையை நாடி அறிவியல் வளர்ச்சியென்று தன் அழிவிற்கு வித்திடுவான்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (28-May-17, 5:20 pm)
பார்வை : 490

மேலே