இவள் உடலில் ஊனங்கள் உள்ளமெல்லாம் எழுச்சிகள்
அவள் கண்களில் ஒளி இல்லை
அந்த ஒளி எல்லாம் அவள் முகத்தில்
அப்பப்பா அத்தனை பிரகாசம்
நான் யார் என்பதை அகக்கண்களால்
கண்டு கொண்டாள் என்னை இன்முகம் கொண்டு
வரவேற்றாள் வஞ்சி அவள் கொஞ்சும் தமிழால்
அவள் பேசா மடந்தை செவிகளும் கேட்காது
ஆனால் எப்படித்தானோ அகக்கண்களால்
எல்லாம் கண்டுகொண்டது போல்
அழகு முகத்தால் கைவிரல்கள் செய்கையிலே
அபிநயம் புரிந்து பேசாமல் பேசுகின்றாள்
நாம் கேட்கவந்ததை கிரகித்து
செய்கையிலே பதில் தருகிறாள் இந்த
அதிசய பிறவி
தன்னைப்போல் உள்ள ஆயிரம் ஆயிரம்
ஊனமுற்றறோர்க்கு வழிகாட்டியாய் இருந்து
வாழ்ந்திட ஊக்கம் தருகிறாள் துருவ நட்சத்திரமாய்
இந்நாளய ஹெலன் கெல்லர் போல்