சிறுதுளி

உன் உழைப்பின் வியர்வை துளிகள்
ஓருநாள் வெற்றியெனும் மனம் வீசும்...

நீ செய்யும் தருமம் உன்னை
கவசம் போல் பாதுகாக்கும்...

கல்வி வாழ்க்கை எனும் ஓடத்துக்கு
ஓர் கலங்கரை விளக்கம்...

அடக்கம் அன்பு பணிவு அமைதி பொறுமை
இருந்தால் உனக்கு எதிரிகளே கிடையாது...

அன்னை மனதை குளிரச்செய்
நீ என்றென்றும் குளிர்ந்து வாழ்வாய்

உன்னையே நீ நம்பவில்லை என்றால்
அடுத்தவன் உன்னை நம்பமாட்டேன்...

அடுத்தவனின் துன்பத்தில் நீ பங்குகொண்டால்
உன் துன்பத்தில் தெய்வம் பங்குகொள்ளும்...

பெண்களுக்கு மதிப்பு தந்தால்
உன் மதிப்பு பன்மடங்கு வளரும்...

எழுத்து அறிவித்தவனை மறக்காதே
மறந்தால் உன்பெயரே உனக்கு மறந்துவிடும்...

தன்மானம் இழந்தும் பெண்மானம்
காக்க துடிப்பவனே உத்தமன்...

எழுதியவர் : செல்வமுத்து.M (30-May-17, 5:16 pm)
Tanglish : siruthuli
பார்வை : 112

மேலே