ஒருகாதல் நம் நாடு

தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்தது .மெல்லிய காற்று வீச திவ்யா தன் காதல் கனவில் மூழ்கி போனாள்.திவ்யாவை பற்றி சிறிது சொல்ல வேண்டும் 5.5 "அடி உயரம் நீண்ட ,கூந்தல் நல்ல நிறம் அழகான பல்வரிசையுன் நிலவை போன்ற முகம் பார்த்தவுன் ஆண்கள் மனதை கீறி விட்டு செல்லும் கொள்ளை அழகு...

அவள் நடை கூட அத்தனை அழகு. அவள் பேசும் போது அன்பில் அசறாத உயிர்கள் எதுவும் கிடையாது இந்த உலகில்..அவள் சிரிக்கும் போது பூக்களின் சாயல் முகத்தில் பொலிவுடன் சிதறும் இந்த உலகில் மேக்கப் போடாமலேயே சில பெண்கள் தான் அழகாக இருப்பார்கள் அதில் இவளும் ஒருவள், அவ்வளவு அழகு..

அவள் மகளிர் கல்லூரியில் படித்துவிட்டு பயணம் செய்யும் போது காதலும் பயணம் போனது..

அன்று கவின்சரனை முதலில் சந்தித்தாள். முதல் சந்திப்பு இளமையில் அடக்கமான அட்டகாசமான ஆண்மகனாக இருந்தான் அவன்.திவ்யாவின் சீட்டருகே நின்றவன் திவ்யாவை பார்த்து..

ஏங்க உங்க பர்சஸ் கீழ விழ்ந்துவிட்டது என்றான்..

அவள் தேங்க்ஸ் என்றள்..
பிறகு இவர்கள் சந்திப்பு சாதரணமாக போனது மூன்று வருடம் ஓடியது .ஒருநாள் திவ்யா வெள்ளிகிழமை தலைகுளித்து சேலையில் வந்தாள் அதை பார்த்த கவின் மனதில் ஏதோ செய்தது இருவரும் பி.டெக் இறுதி ஆண்டு மாணவர்கள்...நார்மல் பேமிலி..

அன்று முழுவதும் கல்லூரியில் கவீன் அவள் நாபகமாகவே இருந்தான்.அவன் நண்பன் என்னடா ஆச்சு உனக்கு என்றான்
ஒன்னுமில்லடா மச்சான் என்றான்..

அவன் அடி மனதில் திவ்யா பேசி கொண்டே இருந்தாள்.

அவன் மச்சான் மனசு ஏதோ பாரமா இருக்கு என்றான் கவின்..

அவன் நண்பன் அதுவந்து நீ காதல்தீவரவாதிஆகிவிட்ட அவகிட்ட பிரபோஸ் பன்னுடா என்றான்..

உன் மேல ஒரு கண்ணு நீ தான் என் முறைப்பொண்ணு பாடல் கவின் செல் போனில் ஒலிக்க ..

மச்சான் எந்த அளவுக்கு காதல் இருக்கிறது எனக்கு புரியுது..

நாளைக்கு முகூர்த்த நாள்டா நாளைக்கு உன் காதல சொல்லிடு என்றான் கிருஷ்ணன் அவன்தான் கவின் நண்பன்..

மறுநாள் அவள் படிக்கும் கல்லூரிக்கு 2 கி.மீ தொலைவில்தான் பஸ்டேன்டு இருந்தது இவர்கள் இருவரும் பஸ்டேன்டுக்கு சென்று திவ்யா அமரும்சீட்டில் அமர்ந்தார்கள் ..
பஸ் புறப்பட்டு மகளிர் கல்லூரிக்கு அருகில் வந்தது ..

முதடவா பார்த்தேன் உன்னை பேஜாராகி போய் நின்னே பொண்ணே என ஐ பாடல் ஒலிக்க கவின் மனதில் காதல் வினைகள் பிறந்தது அந்த நேரத்தில் வெள்ளி கிழமை என்பதால் வழக்கமாக திவ்யா சேலையில் வர கவின் மனதில் ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய அவளும் தன் இருக்கையை பார்த்தாள் கூட்டம் அதிகமானது..
மச்சான் எப்படியாவது ஒரு வார்த்தை அவகிட்ட பேசிட்டு அந்த லெட்டர அவகிட்ட கொடுத்திடு என கிருஷ்ணன் எழுந்தான் ..

திவ்யாவிடம் நீங்க உட்காரங்க நான் இறங்கபோகிறேன் என இறங்கிவிட்டான்..

திவ்யா கவின் அருகில் தயக்கமாக உட்கார்ந்தாள்..

உங்க பேரு என்றான்..

திவ்யா பி.டெக் கம்பியூட்டர் சயின்ஸ் அண்ணா நகர் என்றாள்..

உங்க பேரு கவின் பி.டெக் மெக்கானிக்கல் லாஸ்ட் இயர் என்றான்..

டேய் என்ன ஆச்சு கிருஷ்ணன் வாட்ஸ் அப் செய்தான்...

கவின் திவ்யா போண் நெம்பரை கேட்க ,தர மறுத்தாள் எங்க வீட்ல எங்க அண்ணன் கொஞ்சம் ரூல்ஸ் பார்ட்டி அதான் ப்லீஸ் என்றாள்..

அது இல்லங்க நான் உங்கள மூனுவருஷம் பார்த்து பாலோ செஞ்சிக்கிட்டு இருக்கேன் இந்த வருஷம் காலேஜ் முடியுது அதான்..

அதுக்கு என்றாள்...

இல்ல அதுக்கப்புறம் பார்க்க முடியாது அது வந்து என தயங்கினான் ..

திவ்யா என்றான்..

ம் சொல்லுங்க என்றாள்..
அது வந்து நான்...
நீங்க...என்றாள்..

சரி திவ்யா என்னால ஒன்னும் முடியல அதுவந்து..
எது வந்து என சிரித்தாள்..

உடனே தன் லெட்டரை திவ்யாவின் பர்சிஸ் வைத்து இதில நான் இருக்கேன் நாளைக்கு பதில் சொல்லுங்க என்று சொல்லிவிட்டு இறங்கிவிட்டான்..

திவ்யாவின் மனதில் காதல் சாரல் வீச அந்த லெட்டரை பிரித்தாள்..

அதில் ஆயிரம் தான் வாட்ஸ்அப் பேஸ் புக்னு இருந்தலும் லெட்ர்ல நாம பேசற விஷயம் சந்தோஷம் தான்

நீ என் தேவதை
என் வாழ்நாள்முழுவதும்
வர வேண்டும்
நீ இல்லாத வாழ்வு
ஒருகணமும் கிடையாது
உன் மனம் என்னை காதலிக்க
வாழ்த்துக்கள்
என் உயிர் இதயம் உனக்கு எழுதி கொடுத்துவிட்டேன்
அதுக்கு நீயே சொந்தக்காரி
என்னை ஆள வருவாயா
உன் பதிலுக்காக நான் அல்ல
உனக்கு பக்கபலமாக நான் என் உயிர் உள்ள வரை .....

இதை படித்துதான் கனவில் இருந்தாள் ...
மழையும் விட்டது..

அந்த நேரத்தில்
திவ்யா இந்தா நாளைக்கு கேம்பஸ் இண்டர்வியூ உனக்கு இதை,படி என அவள் அண்ணன் ஒரு புத்தகம் கொடுத்தான்..

சரி என வாங்கி கொண்டாள்..

கேம்பஸ்ஸில் அவள் பெங்களூர் கம்பெனியில் செலக்ட் ஆனாள்..

அவள் கவின் கொடுத்த லெட்டருக்கு பதில் கூற தயங்கினாள்..

அன்று கவின் பஸ்ஸில் ஏறிய உடன் ஹாய் என்றான் ..
இவளும் ஹாய் என்றாள்...

கவின் சொன்னான் எனக்கு இந்தியன் ஏர் போர்ஸ் ல வேலை என்றவுடன் திவ்யா தனக்கு பெங்களூர் கம்பெனியின் விபரத்தை கூறினாள்..

கவின் இந்த லவ் ஒத்துவராது ..
நான் என்னுடைய குடும்பத்துக்கு ஏதாவது செய்யனும், கொஞ்ச நாள் வேலைக்கு போகனும்..

சரி திவ்யா போ..
நான் உனக்காக வெயிட் பன்றேன்..
பீளிஸ் என்றான்..

திவ்யா ஏதும் பேசாமல் இருந்தாள் இன்னும் ஒரு வாரத்தில காலேஜ் முடியுது .பிளீஸ் உங்க நம்பர கொடுங்க என்றான் அவள் தயக்கமாக கொடுத்தாள்..

சில நாட்களில் கல்லூரி முடிந்ததது..
திவ்யா பெங்களூர் சென்றாள்.கவின் டெல்லியில் விமானப்படைபிரிவில் இருந்தான்..

ஆறுமாதம் டிரெயினிங் முடிந்த பிறகு கவின் சற்று தெளிவானான் அவளும் அப்படித்தான்..

ஒரு நாள் கவின் அவளுக்கு போண் செய்தான்..
ஹலோ ..
நான் கவின்..
திவ்யா அழுதாள்..

கவின் நான் ஒன்னுடைய நம்மபர வாங்கவில்லை நீ கூடம் போண் பன்னல என்றாள்..
திவ்யா ஐ லவ் யூ என்றான்..
கவின் என்றாள்..
இப்பகூட சொல்லக்கூடாத திவ்யா என்றான் ..
ஆறு மாசமா தவிக்க விட்டுட்ட
ஐ லவ்யூடா என்று அழுதாள்..

சரி இந்த வாரம் பெங்களூர் வரேன் என்றான்..
திவ்யா நாட்களை எண்ணி கொண்டே போனால்..
அந்தநாள் இனிமையானது..

பெங்களூர் வந்திரங்கிய கவினுக்காக காத்திருந்த திவ்யா கவினை பார்த்தள் முன்பவை விட மிக ஹன்சம் மில்ட்ரி மேனை விட படு ஸ்டைல் பார்த்தவுடன் ஐ லவ்யூ என்றாள்..

ஐ லவ்யூ என்றான்..

அனைத்து இடங்களிலும் சுற்றினார்கள்..

தனிமையான மலை பகுதியில் கவின் திவ்யாவிடம் இந்த உலகத்தில ஒன்ன தவற ஏதுவும் வேண்டாம் என்றான்..

அப்படியா எனக்கு நீ வேணும் என்று கட்டி அணைத்தாள்..
இரு இதழ்கள் சிறிது பறிமாற்றம் முடிந்தவுடன்..
அப்புறம் எப்ப நம்ம கல்யாணம் என்றான் கவின்..
உங்க பேமிலி பத்தி சொல்லு கவின் என்றாள்..
அப்பா அம்மா..
அப்பா கவர்மன்ட்சர்வன்ட்
அம்மா வீட்லதான் இருக்காங்க நான் மட்டும் தான் என்றான்..
சரி திவ்யா உன்ன பத்தி..
அப்பா பேங்க் மேனேஜர் அம்மா டீச்சர் அண்ணா சாப்ட்வேர் என்ஜினியர்...

நான் எப்படியாவது எங்க வீட்ல பர்மிஷன் வாங்கிறேன்...
சரி திவ்யா அவங்க பர்மிஷனுக்கு காத்திருப்பேன் என்று சொல்லி அவளை அவள் தங்கி இருக்கும் ஹாஸ்டலில் விட்டு விட்டு சென்றான் ..திவ்யா கண்கலங்கியபடி பாய் என்றாள்..
ஐ லவ்யூ என்றான்...

இவர்கள் டெலிபோனில் காதல் தொடர்ந்தது..

சிலமாதங்களுக்கு பிறகு திவ்யா தன் அம்மாவிடம் தன் காதலை சொல்ல அவள் ஒரே ஆட்டம் ..

நாம ஐய்யங்கார் ஆவா என்ன ஜாதிடி என்றாள்..
அவள் அண்ணன் நேக்கு இது சரிபட்டு வாரது...
நெஞ்சு வலிகார அப்பாவுக்கு இதெல்லாம் ஆகாது ஆவா காதுக்கு விழுந்தா என்ன ஆகறது..
என்றான்..
திவ்யா கண்கலங்கினாள்...

இங்க பாரு கண்ணா இதெல்லாம் நமக்கு சரிபட்டுவராது ,ஆவாள எங்கிட்ட பேச சொல்லு என்றாள் திவ்யாவின் அம்மா..

இப்படியே நாட்கள் ஒடியது..ஒருநாள் கவினிடம் நடந்ததை சொன்னாள்..
சரி திவ்யா நான் உங்க அம்மா கிட்ட பேசறேன் என்றான்..

சரி என்றாள்..
ஒருநாள் திவ்யா அம்மாவிடம் கவின் பேச..

இங்க பாருப்பா தம்பி இந்த கல்யாணம் ஒத்து வராது..

நீ பார்த்தா ரொம்ப நல்லவா போல தெரியுற ..

ப்ளீஸ் அவாள விட்டுற..

என்றாள் திவ்யாவின் அம்மா.

திவ்யாவிடம் கவின் பேசினான்..

திவ்யா பெரியவங்க"சம்மதம் முக்கியம்"அப்போது தான் நம்ம கல்யாணம் என்றான்..

திவ்யா குழம்பி போனாள் குடும்பத்தின் வற்புறுத்தல்..

கவினின் அன்பும், குடும்பம் இவை இரண்டும் வேண்டும்
என்றவள்..

அப்படியே துவண்டாள்..

திடீர் என்று அப்பா ஒருவரனை காண்பித்து ..

இவா நம்ப சொந்தகார பையன் சாப்ட்வேர் இஞ்சினியர்.நல்ல சம்பளம் இவாள கட்டிக்கோ என வாட்ஸ் செய்தி அனுப்பினார்...

திவ்யா கவினிடம் சொல்ல கவின் தவித்தான்..

சரி திவ்யா வா ரிஜிஸ்டர் மேரேஜ் சரியா என்றான்..

திவ்யா விழித்தாள்..

கவின் மனதில் திவ்யா கலந்து விட கெஞ்சினான் ..
சரி என்றாள் திவ்யா..

மறுநாள் திவ்யாவின் அண்ணன் திவ்யாவிடம் நீ எங்களை ஏதாவது ஏமாத்தனனா இந்த மருந்த கும்பலா குடிச்சிட்டு போய்விடுவோம் என்றான்..

திவ்யாவிடம் குடும்ப பாசம் வெற்றி பெற கல்யாணம் நடந்தேறியது..
மாப்பிள்ளை டெல்லியில வேலை..

கவின் உடன் இருந்த மெயில்,வாட்ஸ் அப்,போன் நம்பர் என அனைத்து தொடர்பையும் அழித்தாள் திவ்யா..

கவின் கனவு கலைந்தது ஆனால் நாட்டுக்கான கனவில் உயர்ந்து நின்றான்..
கார்கில் போரில் விமானப்படையில் சிறப்பாக பணியாற்றினான்..

சில காலம் கழிந்தது..

மிகப்பெரிய விமானப்படையின் ஜென்ரல் ஆக மாறினான்..

வாழ்க்கையில நீங்களும் கவின் மாதிரி வரனும்னா தியாகம் செய்யனும்..
நாட்டுக்காக கல்யாணம் செய்யவில்லை..
பாரத ரத்னா விருது பெற்ற இளம்
ஜென்ரல் கவின் அவர்களை நமது குழுமம் அன்போடு பேச அழைக்கிறது என எல்.ஜி சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைவர் அழைத்தார்.

அங்கு கவின் சாப்ட்வேர் துறைக்கு வரவேண்டியவன்தான் நானும் ஆனா நாட்டுக்காக ஓவ்வொரு மனிதனும் ஏதாவது செய்யனும் என்ற நோக்கத்தில இந்த துறைக்கு வந்தேன்...
பேச்சு நீண்டது ஒரே கை தட்டல்
இறுதியாக வாழ்க்கையில பெற்ற வெற்றி கொண்டாட படாமல் கூட போகலாம் ...
ஏன்னா நமக்கு பிடித்தவங்க நம்மள விட்டு வெகு தூரம் போயிட்டாங்கானா அவங்களுக்கு ஏதாவது உதவி செய்ய எப்பொழுதும் காத்திருப்பேன் ..

உங்களுக்கும் தான்...

உங்க சாதனைகள் வளர வாழ்த்துக்கள் நாட்டையும் கொஞ்சம் பாருங்க!

அடுத்தது நம்ம நாட்டுல எல்லை பிரச்சினை, கஷ்மீர் தாக்குதலுக்கு
என்னை தலமை தாங்க அரசு பேசியிருக்கு..

நிச்சியம் இதில் வெற்றிகாண்பேன் லேசானா நரைத்த தலையுடன் பேச அரங்கம் அதிர்ந்தது...

இந்த நிகழ்ச்சியின் போது திவ்யா ஒருமூலையில் கண்ணீருடன் அந்த பேச்சை கேட்டு தன் நிறுவனத்தில் அமர்ந்திருந்தாள்...

விழா முடிந்தது கவின் பல பேர் சூழ
இராணுவ மரியாதையுடன் செல்லும்
அழகு அவன் மேல் மரியாதை கூட்டியது..

அவள் நினைவில் சரியான முடிவும் நல்ல சந்தர்பங்களையும் மனிதன் தவறவிட்டால் வெறுமையாகிறது என்று கண்ணீருடன்..

ஆனால் இறுதி வரை சந்திக்கவே இல்லை ..

விழா முடிந்து கவின் கிளம்பினான்..
திவ்யா காரை பார்த்தபடி நின்றாள்
மில்லடரி அலறல் அனைவரையும்
ஒருநிமிடம்..

ஒருங்கிணைத்து வாகனம் ஓடியது..
திவ்யாவின் கண்ணிலும் கண்ணீர் ஓடியது..

நல்ல நட்பு சேரமுடியவில்லை இது நடப்பதுதான்..

ஆனால் அவன் திருமணம் செய்யாமல் இருந்த தியாகம் உண்மையான காதலா என திவ்யாவின் மனதில் ஆயிரம் கேள்விகள்..

அங்கே..
பூட் சப்தம் சல்யூட் சார்..
கைதூக்கி விஷ்பன்னினான் கவின்..
டக்..டக்..ட்க்..என கவின் நடக்க இளம் வீரர்கள் கவின் பின்னால் ஓடினார்கள்.....

-சிவசக்தி புதுவை.

எழுதியவர் : shivasakthi (30-May-17, 4:59 pm)
பார்வை : 416

மேலே