ஒருபக்க காதல் கதை-27

உண்மை ஜீரணிக்க சற்று நேரமெடுத்தது அவனுக்கு

மாடியில் உட்கார்ந்து வெகுநேரம் யோசித்தான், கருப்பை இல்லாமல் காதலா?..இது முதலில் காதலா?..அவளின் பார்வைகள், குரல், நடை என அனைத்தும் அவன் கண்முன் வந்துசென்றன.சிறிது ஏக்கம் ..சிறிது நிம்மதியின்மை..சிறிது சந்தோஷமென..அனைத்து உணர்வுகளும் அவனுள் தோன்றி மறைந்தன .கற்பனை பண்மடங்கென உயர்ந்து வானத்தை எட்டியது..இரவு முழுவதும் அவன் தூக்கத்தை ஆட்கொண்டது அது..விடியற்காலையில்...


அம்மா: என்னடா வெயில் கொளுத்துது இன்னும் இங்க படுத்திருக்க ?

அவன்: இல்லமா சும்மாதான்

அம்மா: கண்ணு செவந்துருக்கு, நைட் பூரா தூங்காம யோசிச்சிட்டே இருந்திருக்க..உண்மைய சொல்லு

அவன்: அதான் நீயே சொல்லிட்டியே, இன்னும் என்ன இருக்கு சொல்ல?

அம்மா: வேலைல ஏதாச்சும் பிரச்னையா..இல்ல அந்த தெண்டசோறு ஏதாச்சும் கொழப்பிவிட்டுட்டு போயிட்டானா?..இரு இப்பவே அவனுக்கு போன் போட்டு...

அவன்: அம்மா, கொஞ்ச நேரம் உன் ஆர்வத்தை உன்னால அடக்கமுடியாதா ?.. என்னனு தெரிஞ்சே ஆகணும் இல்ல ..இந்த பொண்ணுங்களே இப்படித்தான் அவங்களுக்கு வேணும்னா என்ன வேணாலும் செய்வாங்க, வேண்டாம்னா எல்லாத்தையும் தூக்கிபோட்டுடுவாங்க
(ஏதும் பேசாமல் அவனையே கொஞ்சம் பாவமாய் பார்த்தாள், இன்னும் சற்று நேரம் இருந்தால் உளறிவிடுவோமென்ற பயத்தில் சட்டென கீழிருக்கும் காகிதங்களை எடுத்து அங்கிருந்து கிளம்பினான்)

எப்பொழுதும் பெண்களுக்கு இருக்கும் உள்ளுணர்வு உண்மை என்ன என்பதை முதலில் காட்டிவிடும்..இருந்தாலும் அதனை உறுதிசெய்வதில் என்னமோ அவர்களுக்கு அவ்வளவு ஆசை

அவன் சென்றவுடன் அவளை போனில் அழைத்து

அம்மா: என்னமா எங்க இருக்க?

அவள்: ஆபீஸ் கெளம்பிட்டு இருக்கேன்மா..இன்னிக்கி கிளைமாக்ஸ் சீன் ரெகார்டிங்

அம்மா: கொஞ்சம் முக்கியமா உன்கிட்ட பேசணும்..(என இழுத்தாள்)

அவள்: (இழுவையை புரிந்தவளாய்)..சரிம்மா 10 மணிக்குத்தான் ரெகார்டிங், நான் இப்பவே வீட்டுக்கு வரேன்

அம்மா: சரி வா..இங்க சாப்டுக்கலாம்

(அரைமணியில்)

அம்மா: நேத்து எங்கையோ போயிட்டு வந்தான்..என்னாச்சுனே தெர்ல, இப்டிலாம் அவன் நடந்துக்க மாட்டான்..அவனுக்கு அவ்வளவா கோவமே வராது..நெறய தோல்விய பாத்து பாத்து அவனுக்கு பொறுமையும், சகிப்புத்தன்மையும் அதிகமாகிடுச்சு..காலைல என்கிட்டயே கொஞ்சம் குரலை உயர்த்தினான்..அவன் வாழ்க்கைல நீதான் இப்ப அடிக்கடி வந்துபோற..என்ன நடந்துச்சு?..எதாவது தப்பா பேசினானா ?எப்பவுமே யார்கிட்டயாது தப்பா பேசிட்டாலோ, நடந்துக்கிட்டாலோ..தன்னையே தண்டிச்சுக்க இப்படி கோவமா இருப்பான்..அதனாலதான் கேக்கறேன்


அவள்: .....

எழுதியவர் : வெங்கடேஷ் நாகராஜன் (30-May-17, 5:36 pm)
சேர்த்தது : வெங்கடேஷ்
பார்வை : 408

மேலே