காதல் காய்ச்சலில் அழியும் பெண்மை

கண்பேசிய காதல் கடந்த காலமாகி
கைபேசி காதல் கணினி யுகமாகி
கசிந்துருகும் காதலர்க்கு காமமே எல்லையாகி
கலப்பட காதலர்களால் காதலுக்கு காய்ச்சலடா!

தோழா !

இடையின் இடைவெளியை இழுத்து மறைக்கும்
இயலாமை இன்று இல்லாத காரணத்தால்
இருக்கும் இளம்பிஞ்சு இடை சிதைந்து
இறக்கும் நிலை தினம் தானடா!

ஆணுக்குள் பெண்ணும் பெண்ணுக்குள் ஆணும்
ஆண்டவன் படைப்பில் அற்புதம் காணும்...
ஆணின் பெண்மையை பெண்ணின் ஆண்மை
அழிக்கும்போது பெண்ணின் பெண்மை
ஆணின் ஆண்மையால் அழியுதடா!

எழுதியவர் : கநேசன் நா (31-May-17, 3:01 pm)
பார்வை : 97

மேலே