உன் மறைமுக ரசிகன்
தேனில் நனைந்த
சுவை அரும்புகள் போல
உற்சாகம்கொண்டன என் புலன்கள்
உன் எவ்வனத்தில் தூரத்திலிருந்து குளித்தபோது...
உடனே குழம்பி அருந்தி
கசந்த அதே அரும்புகள் போல
சட்டென்று நீ காணும்போது முறைத்த நான்...
உன் மீது விருப்பமில்லாமல் காட்டிக்கொள்ள
முனையும் உன் மறைமுக ரசிகன்...