நீங்காத நினைவுகள்

நீங்காத நினைவுகள்.

என்னுயிர் படைத்த பிரம்மாக்கள்
இன்பத் தாய் தந்தையர்
பண்பு பாச உடன்பிறப்புகள்
என்றுமேயுடனிருந்து என்னைச் செதுக்கியவர்கள்.
இன்னும் கனவிலவர்களைக் காண்பதில்
ஆனந்தம் நீங்காத நினைவுகளென்பதே.

எல்லையற்று இருபது வருடங்கள்
ஆனந்தித்த ஊர், கோயில்
வெள்ளி கூட்டுப் பிரார்த்தனைகள்
நட்புகள், ஞானமூட்டிய கல்வியகம்
இன்றாடும் இன்பத் தமிழ்
அடிப்படை அத்திவாரமங்கு தானே!

-அ- தொடங்கியகண்ட சொற்பொழிவு
வரை அச்செழுத்தாயெழுதிப் பெற்ற
பாராட்டுகள், ஆறாம் வகுப்பிலிருந்து
மூன்று வருட விடுதிவாழ்வு
வாழ்வு அனுபவங்களைத் தெளிவாக்கியது.
என்பது நீங்காத நினைவுகள்.

இவ்வின்ப நினைவு முகில்களின்
கூடலும் பிரிவுமான இணைவுகள்
புத்தக அடுக்குத் தூசிகளாக
நினைக்கவும் துடைக்கவும் எத்துணையானந்தங்கள்.
எம்மை இனிக்கவினிக்கப் படிந்தவை
சௌந்தரியமானவை இளமை நினைவுகள்.

பா வானதி வேதா. இலங்காதிலகம்.
வேதாவின் வலை.2
டென்மார்க்.
4-8-2016.

எழுதியவர் : பா வானதி வேதா. இலங்காதிலக (31-May-17, 6:25 pm)
பார்வை : 250

மேலே