காதல்
உன் கண்கள் பேசிய காதல்
உன் கூந்தல் வாசம்
நீ தந்த முத்தங்கள்
உன்னை தழுவிய தருணங்கள்
என் சுவாசத்தில் உன் வாசம் கலந்திருக்க
என் அருகினில் நீ வருகையில்
நான் உரைகிறேன் நித்தம் கரைகிறேன்
ஒரு நொடியினில் என்னை பிரிகையில்
நான் இறக்கிறேன் மனம் கணக்கிறேன்
இது காதல் தந்த காயம்
காலம் செய்த மாயம்
கானல் நீராய் நீயும்
ஒரு வானவில்லாய் நானும்