மந்திரப் புன்னகை

புன்னகையின் அர்த்த மென்னகம் புரிந்திடாத புதிர் என்னவோ?...
கன்னம் வருடுகின்ற தென்றலின் முகங்காண இயலாத நிலையதுவோ?...
பூக்களின் இதழ் விரிப்பில் தேனீயை அழைக்கும் மொழியுண்டோ?...
யாக்கையும் உணர்விழந்து நிற்கிறது இறைவா இதையுணர வழியுண்டோ?...
இரு விகற்ப நேரிசை வெண்பா :
புன்னகையின் அர்த்தம்வி ளங்காப் புதிரேனோ?...
கன்னந்தீண் டும்தென்ற லின்முகமோ?... - என்னிறைவா?...
பூக்களில் தேனீயின் தூதுமொழி ஏதுமுண்டோ?...
யாக்கை உணர்வற் றுறைந்து...