குருவே சரணம்
குரல் கேட்டு அருள் புரியும் குணநிதியே
வரம் தரும் குருவே - மனம் நிறை இறையே
விழிப் பார்வையால் இதம் சேர்த்து அருள் நீயே
சுழி மாற அது போதும் அறிவேன் என் தாயே
உந்தன் கரம் பற்றி நடந்திடுவேன் நான் உன் சேயே
பழி பாவம் சுமந்து நானும் வாழ்கிறேன் புவியிலே
பதம் தந்து உன்னில் சேர்ப்பாய் என்னை நொடியினிலே -