கொடுத்தனுப்பிய கடிதங்களை என்ன செய்தாய் ..?
வாழ்நாளெல்லாம்
காதலை
மௌனமாய் தூக்கி சுமக்க
நான் நத்தை அல்ல...!!
"நீதான் இருக்கிறாய்" என்று
நித்தமும்
நெஞ்சுகிழித்து கட்ட
நான் அனுமனும் அல்ல...!!
உனக்காக எழுதிய..
என் கவிதையை வைத்து
"காதல் ஜெயித்தவனின் குழந்தைக்கு
நாளை காதுகுத்தாம்...?!"
கொடுத்தனுப்பிய கடிதங்களை
என்ன செய்தாய் ..?
குளிர் காய்கிறாயா....
பனிகாலங்களில்..?
கப்பல் விடுகிறாயா...
மழைகாலங்களில்..?
அக்கா குழந்தையின் கழிவு துடைக்க
கொடுத்துவிட்டாயா..?
கனவுகளில் கசிந்துருகும்
உனக்கும்...,
நேரில் 'நரகம்' பரிசளிக்கும்
உனக்கும் ...
எத்தனை வேற்றுமைகள்..?!