தோழி என்றும் அவள் எனக்கு
தோழி என்றும் அவள் எனக்கு
அவள் எனக்கு
தோழியாய் கிடைக்க
என்ன வரம் கொண்டேனோ
என்னை படைத்தவனே நன்றி
உனக்கு ..........
சகோதரி இல்லை எனக்கு
ஒருவேளை இருந்தாலும்
என் தோழிக்கு ஈடாய்
என் மீது அன்பு கொண்டிருப்பாளோ
என்று சந்தேகம் தான்
எனக்கு !
தினமும் எனை கண்டிப்பால்
திமிரில் இல்லை நான்
திசை மாறி போவேனோ
என அஞ்சி அக்கரையில்
எனை கண்டிப்பால்
என் அன்னையாய் !
ரத்த சம்பந்தம் இல்லை
என்ற பொழுதும்
எனக்கு ஏற்பட்ட இன்னல்களுக்கு
அவள் ரத்தம் கொதிப்பதற்கு
அவள் கண்ணீர் சாட்சி !
இன்றல்ல
நாளை அல்ல
எங்கள் ஆயுள் முழுவதும்
சிறு துளி சலனம் இல்லாத
தூய்மையான எங்கள் நட்பு
முடிவில்லாமல் தொடரும் ....................................
என் அன்பான தோழிகளுக்கு சமர்ப்பணம் இந்த வரிகள்