முதல் பரிசு
உன் முழு அன்பின் மொத்த வெளிப்பாடு
எனக்கான இந்த பரிசு...
கவிதைகளில் வார்த்தை தேடுகிறேன்
உன் பரிசை பாராட்ட
ஒரு சிறு புன்னைகைள் போதுமே
உன் மொத்த கோபங்களும் கரைய...
அன்பான உன் திமிரில்
உள்ளது ஓராயிரம் அர்த்தங்கள்
ஒரு சிறு பிள்ளை போலவே உன்னிடம் வருகிறேன்
கை பிடித்து செல்கிறாயென ...
உன்னோடு செல்லும் போது ஒவொரு சாலை
சந்திப்புகளிலும் நம் சந்திப்பின் அர்த்தம் புரிகிறது...
நிமிடங்களாகவோ நொடிகளாகவோ
கடந்து போனாலும் ஒரு மௌன மொழிகளிகளில்
கோபத்தை கொட்டி தீர்க்கிறாய் ...
செல்லமாய் நீ கிள்ளி போகையில்
மொத்த இரத்தங்களும் சுண்டி தான் போகிறதே ..
சண்டை போடாத அழைப்புகளோ
திட்டி செல்லாத சந்திப்புகளோ
நமக்குள் நடந்ததே இல்லை...
விட்டு போகிறேன் என்று சொல்லி விட்டு போகிறாய்
திரும்ப அழைத்து நான்
கெஞ்சலுடன் மன்னிப்பு கேட்பேன் என்று...
தவிக்கிறேன் தனிமையில்
ஓவொரு நொடியும் ....
நம் அலைபேசிகளின் சங்கமத்திற்காக....
******************** சக்தி _ சிவா **************************