எங்கு நீ சென்றாய்
நெஞ்சிலே நின்றாய் நினைவிலே கலந்தாய்
கனவிலும் வந்தாய் கண்களால் கொய்தாய்
அன்பை நெய்தாய் மழையாய் பெய்தாய்
வசந்தம் நீயெனச் சொன்னாய் என்னிடம்
மகிழ்ந்தேன் சிரித்தேன் களித்தேன் ரசித்தேன்
சுவைத்தேன் வாழ்வே இதுவெனச் சுவைத்தேன்
உறவின் சுகந்தம் உணர்ந்தேன் உன்னிடம்
நீயே எந்தன் அனைத்தும் ஆனாய்
தேவை யாவும் தீர்ந்ததும் இவ்விடம்
மாயமாய் மறைந்து சென்றாய்நீ எவ்விடம்
வாடுகிறேன் வதங்குகிறேன் வாழும்வழி அறியாது
தவிக்கின்றேன் துடிக்கின்றேன் மீள்வாயா என்னிடம்
ஆக்கம்
அஷ்ரப் அலி