எல்ஐசி போல் உயர்ந்த நண்பருக்கு சந்திரகுமார் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

உருவாகினாய், உருவாக்கினாய்
உயரங்கள் கைப்பற்றினாய்.
வரும்வாழ்வென வாசல் பாராமல்
வந்தாய் ; வெளி பார்த்தாய்
தெரு பார்த்தநீ திகைத்ததில்லையே
திடுக்கிட்டு மலைத்ததில்லையே
இரு வாழ்க்கையே உனைப் பார்க்கிறேன்
இரும்புப்பிடி பிடித்தாய்.

தட்டித் தட்டிநீ திறந்த கதவுகள்
தட்டித் திறக்க மறந்த கதவுகள்;
எட்டி எட்டிநீ பிடித்த உயரங்கள்
இதயத்தில் உள்ளன எத்தனை துயரங்கள்
வெட்டி வார்த்தைகள் வெற்றுக் கூச்சல்கள்
வெற்றி வாழ்வுக்கு நீ கொண்ட கூச்சங்கள்
தொட்டுத் தொட்டு நீயே செதுக்கினாய்
சூரியச் சிற்பம் ஒளியாய் கசிந்தது.

கற்று நோக்கினாய் , உற்று நோக்கினாய்
கட்டி நோக்கினாய் , சற்று நோக்கினாய்
பெற்றும் நோக்கினாய் பிறகும் நோக்கினாய்
பேசாமல் இருந்தால் சிறகும் கூசுமென
எட்டிப் பறக்கிறாய் இன்றும் பறக்கிறாய்
எப்படி யேனும் பாலைக் கறக்கிறாய்
மட்டில் லாததோர் மகிழ்ச்சி அடைகிறேன் !
வாழ்வை அறிந்துநீ வாழ்வில் சிறக்கிறாய் !

சூழ்க வெற்றிகள் ! சூழ்க செல்வங்கள் !
வாழ்க நண்பனே காலம் கூடி நீ !!!

எழுதியவர் : கனவுதாசன் (3-Jun-17, 9:03 pm)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 105

மேலே