இலையுதிர் காலமே வசந்த காலத்தின் தொடக்கம்

மரத்தின் இலைகளெல்லாம் உதிர்ந்துவிட்டால், அம்மரமே அழிந்துவிட்டதாகப் பொருளாகாது...
உதிர்ந்த இலைகள் மீண்டும் துளிர்க்கும்...
மரத்தின் உயிர் நிலத்தில் புதைந்துள்ள வேரையும், அந்நிலத்தின் நீர் ஆதாரத்தையும் சார்ந்ததே...

இலையுதிர் காலமே வசந்த காலத்தின் தொடக்கம்...

அன்பின்றி வறண்ட உள்ளம், நீரின்றி வறண்ட உலகமாய்
துன்பத்தில் உளன்று கொண்டிருக்கிறது...
அன்பே நீரென்றால் கருணையே நீரூற்று...

உள்ளத்தில் அன்பு வற்றி வறண்டுவிடாதிருக்க வேண்டுமெனில் கருணையானது உள்ளத்தை வியாபிக்க வேண்டியதும் அவசியமே...
அதே போல் அன்பால் கருணையுள்ளம் நிலைத்திருக்கிறது...
அன்பு அதிகரிக்க அதிகரிக்க கருணை அதிகரிக்கிறது...
கருணை அதிகரிக்க அதிகரிக்க அன்பு அதிகரிக்கிறது...

கருணையைத் துறந்து அன்பைப் பெறுவது இயலாது...
அன்பைத் துறந்து கருணையைப் பெறுவது இயலாது...

அன்பே உடலென்றால் கருணையே உயிர்...
கருணையே உடலென்றால் அன்பே உயிர்...
இரண்டையும் பிரித்தால் ஒன்றுமே இல்லை...

அறிவின் வளர்ச்சி என்பது அன்பு மற்றும் கருணையின் அளவைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது...
இதே ஞானமென உணரப்படுகிறது...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (4-Jun-17, 7:13 pm)
பார்வை : 1732

சிறந்த கவிதைகள்

மேலே