மௌனக் குறியீடுகளும் கொஞ்சம் எரி நட்சத்திரங்களும்

மௌனித்தபடியே
கடக்க வேண்டியிருக்கிறது
உன் ஒற்றை வழித்தடத்தில்
மொழிகள் கடந்த
மௌனத்தின்
என் கடைசி கையிருப்பில்
இப்போது இருக்கிறது
வரண்ட புன்சிரிப்பும்
செயற்கையான
தலையாட்டல்களும்


உடன்பாடேயில்லாத
என் மௌனங்களில்
புது மொழி காண்கிறாய்
உனக்குகந்தபடி எப்போதும்

வெற்றுச் சடங்காகிபோன
சம்மதக் குறியீடுகளான
என் கண் சிமிட்டல்களில்
மறைத்து வைத்திருக்கிறேன்
ஒரு கோடி எரி நட்சத்திரங்களை

எழுதியவர் : பிரேம பிர்பா (4-Jun-17, 4:38 pm)
பார்வை : 111

மேலே