ஒரு பசுவின் சாபம்

ஒரு பசுவின் சாபம்
==================
தான் பெற்ற பிள்ளைக்குத்தான்
பாலூட்டுவாள் தாய்
யார் பெற்ற பிள்ளைக்கும்
பாலூட்டினேன் நான்.
பயனற்றுப் போன
தாயை முதியோர் இல்லத்துக்கும்
பால்வற்றிப் போன என்னை
பசு வதைக்கூடத்திற்கும்
அனுப்பிய நீயும் ஒரு நாள்
உடல் வற்றி யாருக்கும்
உபயோகமுமற்றுப் போகும் போது,
கவலை வேண்டாம்..
உன் மகன் அனுப்பி வைக்க
ஒரு மனித வதைக்கூடத்திற்கு
எதிர்காலம் ஏற்பாடுகள்
செய்திருக்கும்..
- ஆ.மகராஜன்,திருச்சி.