பிறப்பும், அழிவும்

வான வெளியில்
எண்ணற்ற தாரகைகள்
மின்னா கோள்கள்
வந்தநாள் முதல்
இந்த நாள் வரை
இவை அனைத்தும்
சுழன்று கொண்டேதான்
இருக்கின்றன ஆனால்
இவை ஒவ்வொன்றுவிடும்
சூரியன் ஒத்த தாரகையும்
இப்படித்தான் ஒரு நாள்
ஓட மறக்க மாய்ந்துவிடும்
கருப்பு ஓட்டைகளாய்
சுழற்றிவிட்டால் சுழலும்
பம்பரம் போல் -இறைவன்
சுற்றவிட்ட பம்பரங்கள்
இவைகள் -அவன் படைத்த
அத்தனையும் இருந்து
வாழ்ந்து ஒரு நாள்
அழிவது திண்ணம்
இத்தனையேன் அவனே
மானிடனாக பிறந்தால்
அவனுக்கும் அழிவு உண்டே
பிறப்பென்றால் அழிவு
அதன் கால்கட்டு
பிறப்பை போல் அழிவை
கண்டால் அவலம்
ஒன்றுமில்லை நமக்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-Jun-17, 9:16 pm)
பார்வை : 194

மேலே