சின்ன சின்ன மலரே

சின்ன சின்ன மலரே - இந்த
மண்ணில் உதித்த நிலவே
தென்றல் போல வந்து எனை
தாலாட்டும் புது உறவே..

என் கண்களுக்கும் சொர்கம்
உன்னை கண்ட நாளில் வரும்
பெண்களுக்கும் புது சொந்தம்
உன் சின்ன பாதங்கள் தரும்...

ஒளி வந்தால் ஓடி ஒளியும்
இருள் போலே - என் கண்ணே
நீ வந்தால் ஒடி மறையும் என்
துன்பம் பனிபோலே...

குறும்பு செய்யும் கண்ணா - என்
மனதில் பாச அரும்பு கொய்யும்
மன்னா - மன்னர் மன்னனாக நீ
ஆட்சியில் அமரும் நாள் வருமடா
சின்ன சின்ன மலரே - இந்த
மண்ணில் உதித்த நிலவே...

எழுதியவர் : செல்வமுத்து.M (5-Jun-17, 7:04 pm)
Tanglish : sinna sinna malare
பார்வை : 96

மேலே