முள்ளி வாய்க்காலாய் மாறும் கதிராமங்கலம்
மாநில ஆட்சி மாறி விட்டது
மாநில ஆட்சி சுரண்டியது போக
மத்ததை சுரண்ட தயாராகுது
ஒரு மத்தியம் இங்கு
குடியை கொடுத்து
நிறைய குடியை கெடுத்து ,,,
காற்றை கூட (2G )
கண்டவனுக்கு விற்று,,,
பலப்பல கிரானைட்
பத்திரமாய் பதுக்கி ,,,
படிக்காதவனும்
மருத்துவ பட்டம் பெற்று ,,,
இலங்கை தமிழ்
இனத்தின் படுகொலை ,,,
லஞ்சம் அதை லட்ச லட்சம்
உயர்வாய் உயர்த்தி ...........
என்று அடுக்கிக்கொள்ளலாம்
சாதனைகளை
சம்பாதித்தது போதும் என்று
கைமாற்றல் இன்று அவர்களுக்குளே
மாநிலம் சுரண்டி போக இப்பொது
மட்டியம் சுரண்ட ஆரம்பம்
முதல் சாதனை,,,-----
மற்றும் ஒரு முள்ளிவாய்க்கால் ------ என்று கதிராமங்கலம்
விழித்திருந்து பயனில்லை
கை உயர்த்தி கொள்ள பழகிக்கொள்ள