சிந்தனை உனதாய் தனிமையில்
அந்திப் பொழுதினிலே ஆகாய நீலத்திலே
சிந்தனை உனதாய் தனிமையில் காத்திருக்கையில்
மஞ்சள் நிலா வானில் மெல்ல எழுந்து வந்து
மார்கழித் திங்கள் பாடுதடி !
----கவின் சாரலன்
அந்திப் பொழுதினில் ஆகாய நீலத்தில்
சிந்தனை யேஉன தாய்காத் திருக்கையில்
மஞ்சள் நிலாவானில் மெல்ல எழுந்துவந்து
மார்கழித்திங் கள்பாடு தே .
---இலக்கணம் சாரா இன்னோசை வரிகள் இன்னிசை வெண்பாவாக.
பயிலுங்கள் முயலுங்கள் கவிஞன் என்று பெருமை அடையுங்கள்