நனைகிறேன்
கருமேகம் சுமந்து வரும்
மழைக்காகக் காத்திருக்கும் உழவனாய்
உலாவரும் உன்
பார்வைக்காக ஏங்குகிறேன்..
மலைக்கற்றுப்பட்டும்
குளிராதவள்..
என் குரலுக்கு
செவிசாய்க்கிறாள்....
ஊரெல்லாம் வரட்சியில்
வாடுகையில் நான்மட்டும்
உன் நினைவில்
நனைகிறேன்.....