கிறுக்கியின் கிறுக்கல்கள் - 06

என் முத்தங்களால்
மூழ்கிக்கிடக்கிறது..!
நீ முகம் பார்த்து போன
#என்_வீட்டு_கண்ணாடி..!

நீ குளித்து முடித்து தலை
துவட்டி போன பொழுதுதான்
#மழையில்_நனைந்த
#நிலவை பார்த்ததாய்
நியாபகமெனக்கு..!

உன்னை கடந்துபோகும்
காற்றுக்கு வேகத்தடை
#நீ..!

நீ நடந்துபோகும் சாலையில்
கிடந்து உருளுகிறது
#மலர்கள்..!

பூங்காவில் ஓர் வாசகம்..!
உன் விரல்கோர்த்து
வீரநடையில் நான்..!
#பூக்களை_தொட
#அனுமதியில்லையாம்..!

இயன்றவரை முயன்றுவிட்டேன்
பயின்றுவாவென அறிவுறுத்துகிறது
#தோல்வி

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (7-Jun-17, 2:49 pm)
பார்வை : 230

மேலே