அந்தி மயங்கும் வேளை

அந்தியும் மயங்குதடி ஆளரவம் இல்லையடி
ஓடையில் நுழைந்த தென்றல் உடல்பட்டுச் செல்லுதடி
சிந்திய நீர்த்துளிகள் மேனியெல்லாம் சிலிர்க்குதடி
அந்தகாரம் இளமைநிலா உன்னழகைக் கூட்டுதடி
வண்ணமயில் ஆடுதடி குயில்பாட்டுக் கேட்குதடி
மந்தியொன்று அங்கிருந்து உனை மயங்கியே பார்க்குதடி
கிளிகள் மரக்கிளையில் காதல்மொழி பேசுதடி
மனதெல்லாம் உன்பக்கம் கிறங்கியே சாயுதடி
உன்னவன் ஏக்கம் போக்கிடடி இன்னுமேன் தயக்கமடி
பந்தியிலே நீயமர்ந்து எனக்குப் பரிமாற வேண்டுமடி

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (7-Jun-17, 12:45 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 109

மேலே