கவியரங்கம் --- 3

யாதும் ஊரே !!! யாவரும் கேளீர் !!! --- கவியரங்கம்

தமிழ் வணக்கம் :- ( எண்சீர் விருத்தம் )

பைந்தமிழில் பேசினாலே பக்குவத்தின் வேராம்
----- பசுமைகீதம் இசைத்திடுவோம் எந்நாளும் ஒன்றி
தீந்தமிழின் ஓசையுடைத் தெவிட்டாதச் சொற்கள்
----- திக்கெட்டும் புகழ்பரப்பித் தீயாகி நிற்கும் .
மாந்தர்கள் யாவருமே ஒன்றாகச் சேர்ந்து
------ மாந்துவோம் செந்தமிழை மாசறவே கற்று
சாந்தமாக சந்ததிகள் பெருகிடலும் வேண்டும் .
------ சந்தங்கள் எம்மருங்கும் நிலைப்பெறலும் வேண்டும்.


அவையடக்கம் :- ( தரவு கொச்சகக் கலிப்பா )


அவைதனையே வணங்குகின்றேன் அருந்தமிழில் கவியரங்கில்
சபைதனிலே வந்திங்கு சாற்றுகின்றேன் கேட்டிடுவீர் .
சுவைபடவே ஒலிக்கின்ற சுகமான தமிழோசை
தவமாகக் கிடைத்திடுமே தமிழோரே ஏற்றிடுவீர் !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (7-Jun-17, 8:48 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 97

மேலே