இது மாலை நேரத்து மயக்கம் போல
![](https://eluthu.com/images/loading.gif)
மஞ்சள் வெயில் மாலை நேரம்
மனம் பதைபதைத்து கொண்டிருக்கிறது
அவள் வரவை எண்ணி எண்ணி !
மஞ்சள் நிற சுடிதாரில் வருவாளா !
மாம்பழ வண்ண சேலையில் வருவாளா !
மாங்கனியாளுக்கு இரண்டுமே அழகு !
மல்லிகை சூடிக்கொண்டே வருவாளா
மஞ்சள் வண்ண ரோஜாவை சேர்த்தும் சூடி இருப்பாளா !
மரம் இருந்து உதிர்ந்த பூக்களெல்லாம்
மல்லிகையாள் பாதம் தொட காத்திருக்கிறதோ !
மனதை பறித்தவளின் தரிசனம் காணவே
மணிக்கணக்காய் மாமன் அவன் காத்திருப்பான் என
மருதாணி நிறம் கொண்டவளுக்கு தெரியாமல் இருக்குமோ !
மாலையும் சூழ்ந்து இருள் கவ்வுமோ ..நேரமும் கடக்கிறதே
மயில் அவளின் வரவை எண்ணி மனமும் வதைக்கிறதே !
வருவாளா ! வரமாட்டாளா !
ம் ....
ஒருவேளை இது மாலை நேரத்து மயக்கம் போல