மக்கள் விழிப்புணர்வும் ,நல்லாட்சியும்

அடுக்கு மொழிகளை அள்ளி வீசி
பாமரரைமயக்கி பேசி
மதி மயங்க வைத்து வோட்டு கேட்டு
அதையும் பெற்று ஆட்சியை கைப்பற்றி
பின்னே அடுக்கு மொழியியல் பேசியவை
அத்தனையும் மறந்தது போல் தம் வழியிலேயே
ஆட்சியின் சுகங்கள் அத்தனையும் பெற்று
பாவம் அப்பாவி மக்களை மறந்த
கல்லுள்ளம் கொண்ட தலைவர்களை
இப்போதெல்லாம் மக்கள் கண்டு கொண்டு விட்டனர்

பேச்சால் மட்டுமே மக்களை ஈர்த்த
தலைவர்கள் இனி வெறும் வெற்றி பேச்சிலே
மக்களை ஏமாற்றும் காலம் போயே போனது
இப்போதெல்லாம் மக்கள் விழித்துக்கொண்டனர்
யார் ஆண்டால் என்ன என்றஎண்ணம் போய்
திறமையும் நாட்டுப்பற்றும் உள்ள நல்லோர்கள்
ஆட்சி நடத்த வேண்டும் என்று மக்கள்
எண்ணத் தொடங்கிவிட்டனர்-இனி பயம் இல்லை
நேற்றைய காந்தியரும்,ராஜாஜியும், காமராஜரும்
மீண்டும் பிறப்பர் நாட்டை நல்வழி படுத்த
தீமையை வேரோடு எடுத்து வீசி எரிய
கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு சீர்தூக்க
உண்மையே இறைவன் என்று உழைத்து
நாட்டையும் மக்களையும் உயர்த்த

மக்கள் ஆட்சியில் மக்கள் விழிப்புணர்வு
ஆட்சிக்கு ஓடு சக்கரங்கள்
சக்கரங்கள் அச்சு முறிந்தால்
ஆட்சி வீழ்ந்திடும் அழிந்திடும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Jun-17, 11:58 am)
பார்வை : 76

மேலே