அவன் என்

தொடர்வழி என்று தெரியாமல் தொடங்கிய ஒரு பாதை. அதில் தொடர்ச்சி என்று தெரியாமல் சந்தித்தேன் ஒருவனை. இனம் ரீதியில் அவன் ஒரு ஆண். ஆனால் அவனிடத்தில் நான் இதுவரை ஆணவத்தைக் கண்டதில்லை.


அவன் என் உடல் பிறப்பும் இல்லை, எனக்கு உயிர் கொடுத்த பிறப்பும் இல்லை. இருந்தும் முதன்முதலில் கொடுத்தான் எனக்காக அவனின் தோள்களை.


அவனின் தலைமுடி வெள்ளை ஆகவில்லை. அதனால் அவனை என் தந்தை இல்லை என்றும் சொல்லமுடியாது. தாடிகள் கொண்டு இருப்பதால் அவனை அன்னை இல்லை என்றும் சொல்ல முடியாது.

வாழ்க்கையின் இடைக்காலத்தில் இமைகளில் ஓடிய கண்ணீர் துளிகளை அவன் மட்டுமே அறிந்து துடைக்க வந்தான். ஆனால் அவன் கடவுள் இல்லை. காரணம் நான் என் கண்களால் கண்டு விட்டேன். அதனால் என் கண்களில் பொய்களும் இல்லை.


நீல(ள)க் கடல்மீது நீர்துளியானது பட்டபோதும் நீரானது நிறம் மாறுவதும் இல்லை. அதன் நிலை மாறுவதும் இல்லை. இருத்தும் அந்தநீர் மாறிவிட்டதாக எண்ணுகின்றோம். அதற்க்கு காரணம் நீர் அல்ல. நம் பார்வைகள் கண்ட மாற்றம் தான். 100 சதவிகிதத்தில் 99 சதவிகிதம் தவறை மட்டுமே சரியாக உற்று நோக்கும் மக்கள் அதில் சரியாக உள்ள 1 சதவிகிதத்தை பார்க்க தவறிவிடுகிறார்கள். இதற்க்கு காரணமும் நம் பார்வைகள் கண்ட மாற்றம் தான்.


அன்று அவன் தோள்களில் இடம் கொடுத்தவன் இன்று வரையும் அவனின் தோள்களை எனக்காகவே கொடுத்து உள்ளான்.

நிகழ்கால வாழ்க்கையில் நாட்கள் மாறியது, நிகழ்வுகள் மாறியது, நானும் மாறினேன், அவனும் மாறினான், ஆனால் எங்கள் உறவு மாறவும் இல்லை. மறக்கவும் இல்லை. அதனால் தான் இன்றும் "அவன் என் தோழன்"..............................................................................

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (9-Jun-17, 12:00 pm)
Tanglish : avan en
பார்வை : 467

மேலே