சதி கொண்ட கலாச்சாரம்

சதி கொண்ட கலாச்சாரம்
====================
நதி கொண்ட
கலாச்சாரத்தில் தான்
சதி கொண்டு
வாழ்க்கை அழிக்கப்படுகிறது

தயாராக இரு
உண்ண உனக்காக
நெகிழி அரிசியும்
முட்டையும் காய்கறிகளும்
அடித்து வைக்கப்பட்டள்ளது
நெகிழிச் சந்தையில்

இன்றே வாங்கி
உடனே அரிசியில் கலந்து
உன் குடும்பத்தை
விருத்தி செய்...!!!
இதற்கு தானா
உன் ஒன்பது ஓட்டைகளையும்
அடக்கி ஓர் மூலையில்
முடங்கி கிடந்தாயோ...!!!

என் இறைவா
இதை அறியா
என் மக்களுக்கு
வழி காட்டுவது யாரோ...!?

ஒற்றைப் போர்வைக்குள்
சடுகுடு விளையாடும்
நேரம் அல்ல இது...!!!
ஒற்றை விழியால்
கையாலாகதவனை
பரலோகம் அனுப்பும் நேரம் இது...!!!

இதுவும் உன் காதில்
எட்டவில்லை என்றால்
நீயே பரலோகம்
சென்று விடு....!!!
என் உறவுகளுக்காக
மிச்சம் உள்ளது
என் உயிர்
குரல் கொடுக்க
ஓர் மனிதனாய்...!!!

-J.K.பாலாஜி-

எழுதியவர் : J.K.பாலாஜி (10-Jun-17, 10:22 pm)
சேர்த்தது : J K பாலாஜி
பார்வை : 64

மேலே