இங்கே ஓர் வசந்தம்
மரத்தடியில்- என் நாட்டு
மங்கை ஒருத்தி
அரப்பு மணம்வீசும்
நீண்ட கூந்தலுடன்.
மெல்ல
அருகில்
சென்று
களைப்பிற்கு
சிறிது நீர்
வேண்டினேன்
பதமான
இளநீர்-தென்னை
மரம் ஏறி
பறித்து
கொடுத்தாள்
அந்தப்
பாமரப்பெண்.அங்கே
வீரத்தாயின்
விழுதொன்று கண்டேன்
சிறிது
இளைப்பாரி
கருத்துக்கள்
பல பரிமாரி
பின்பு
தேநீர்
வேண்டினேன்
அவள்
வெள்ளாட்டுப்பால்
கறந்து
தொட்டுப்
பொட்டு
வைப்பதுபோல்
தேநீர்
தந்தாள்
அதன்பின்
பசி
எடுக்கவில்லை.
இயற்கை
படைப்புக்களைநாடி
இதயம்
படபடத்தது.