இன்றைய நிலை

கட்டணபிடியில்
கனவுகள் பதுங்க
கல்வியும் மருத்துவமும்
சேவை இல்லை!
இனி காசுக்கு வேறு
தேவை இல்லை!

நடிகனுக்கு கைதட்டு!
நண்பனுக்கு துரோகம் செய்!
குற்றவாளிக்கு கொடி பிடி!
கூழுக்கு நாளை பிச்சையெடு!

பசிக்கு உணவளிக்காதே
பிறந்தநாளில் பிரியாணி போடு!
மறந்துக்கூட மரம் நட்டுவிடாதே!
மற்றவர் நட்டால் கைத்தட்டல் செய்!

முதலாளி சாதியை கேட்காத நீ தான்
முதலில் வருகிறாய் மூக்கை நுழைத்து
அடுக்கு மாடியில் அடைப்பட்ட நமக்கு
அர்த்தம் கூட தெறியாது அரிசிக்கு


நாகரிக மாற்றத்தில்
நாம் விலங்காய் போனோம்
விளங்காமல் போவோம்
விவசாயம் போனால்

சக்தி ராகவா

எழுதியவர் : சக்தி ராகவா (14-Jun-17, 11:43 pm)
சேர்த்தது : சக்தி ராகவா
Tanglish : indraiya nilai
பார்வை : 853

மேலே