ரத்தத்தில் முளைத்த என் தேசம் » வரலாறு

பொருளாதார வளர்ச்சியே அனைத்திற்கும் தீர்வு என்று பலர் பேசுகிறார்கள். இது உண்மையா என்று ஆழமாக சிந்தித்தோம் என்றால் நிச்சயம் இல்லை என்பதே தீர்வாக இருக்கும். ஒரு தேசம் என்னதான் பொருளாதாரத்தில் வளர்ந்தாலும் அதன் மக்களிடையே சகிப்பு தன்மையும், பரஸ்பர அன்பும், தேச பற்றும் இல்லாது போனால், அந்த பொருளாதார பலம் அழிவுக்கே வழி வகுக்கும். மேலும் இந்த மூன்றும் இல்லாது போனால் பொருளாதார வளர்ச்சி என்பதே சாத்தியம் இல்லைதான்.

பாரதம் என்கிற இந்த தேசம் எத்தனை பழமையானது ? பழங்காலத்திலேயே எத்தனை உயர்ந்து இருந்திருக்கிறது என்று பார்த்தோம் என்றால் நம்மை அது ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

ஐரோப்பிய சமூகம் ஆதிவாசிகளாய் இருந்த காலத்திலேயே மிக உயர்ந்த விஞ்ஞானத்தை நம் வேதங்கள் வெளிப்படுத்துகின்றன. சிந்து சமவெளி நாகரீகம் பல்கலைகழகங்களையும், திட்டமிட்ட நகரங்களையும் உருவாக்கி வைத்திருந்த கால கட்ட‌த்தில் ஐரோப்பியர்கள் கற்களை உரசி தீ மூட்ட அறிந்திருந்தார்களா ? என்பது கூட சந்தேகமாக இருக்கிறது. யேசு பிறந்ததாய் வெள்ளையர்கள் குறிப்பிடும் காலத்திற்கு முன்பே உலகின் முதல் அனையாம் கல்லனையை கரிகால சோழன் கட்டி விட்டான். அறுவை சிகிச்சைகளும், வானியல் சாஸ்திரங்களும், இலக்கிய கோட்பாடுகளும், பலவிதமான தத்துவ நெறிகளும் புழக்கத்தில் இருந்து விட்டன. உலகின் தலை சிறந்த நாடாக பாரதம் திகழ்ந்தது.

பாரதம் அகண்டு பரவி இருந்தது. அதன் எல்லைகள் காந்தாரம் எனும் ஆப்கான் முதல் பர்மா மற்றும் தெற்கே இலங்கை வரை விரிந்து பரவி இருந்தது. பல பேரரசர்களும், சிற்றரசர்களும் அதை ஆண்டு வந்திருந்தாலும் தர்மமே அதனை இனைக்கும் சக்தியாக இருந்தது. யுத்தம் முதல், சாமான்ய நிகழ்வுகள் வரை தர்ம நெறிப்படியே நடத்தப்பட்டன. பஞ்சமோ, பட்டினி சாவுகளோ, பெருநோய்களின் தாக்கமோ பண்டைய பாரதத்தில் அறியப்படவில்லை.

ஆனால் என்ன நடந்தது அதன் பிறகு ? அற்புதமான நாடாக இருந்த பாரதம் இந்த தேசத்தில் ரத்த ஆறு ஓட வைத்த சரித்திர சம்பவங்களில் முக்கியமானவற்றை ஆதாரத்தோடு ஆராய்வோம்.

எழுதியவர் : (15-Jun-17, 4:23 pm)
பார்வை : 79

மேலே