தவிப்பு
தவிப்பு
**************
உன் புன்னகையிலிருந்து
கிடைப்பப்பெற்ற ஆறுதல்
நீ பேசாத நேரங்களில்
இமைகளின் ஈரங்களை
துடைக்கும் நினைவுகளாய்,,,,,,
என் வலிமையை அடக்கி ஆளும்
உன் மௌனத்தினை
மொழி பெயர்கிறேன்
உன் பிரிவு தந்த கீறல்களால்,,,,
உலகம் எவ்வளவு அழகானது
நீ விலகும் நேரங்களில் நரகமாகிறது,,,
என் இரவுகளில் அதிகரிக்கும் தனிமையை
உன் அழைப்புக்களால் மட்டுமே
மென்மைப்படுத்த முடிகிறது,,,,,
பனித்துளியை சுமக்கும் மலர்களை
பறவை கொத்தித்தின்பது போல்
விட்டு விட்டு விதைக்கிறாய்
விஷம் கலந்த வார்த்தைகளை,,,
காத்திருப்பு,
உனக்கும் எனக்கும் நிரந்தரமானது
விதிமேல் பழிபோட்டு
நீ என்னை விலகிச்சென்ற பின்னும்,,,,