எல்லாமே

மன்னர் வேடம் போட்டால்தான்
மறுநாள் உண்ண வழிபிறக்கும்
தன்மை எங்கும் பொதுவேதான்
தாங்காப் பசியை ஆற்றிடத்தான்,
தின்ன உணவு தேடியேதான்
தெருவி லெங்கும் அலைவதுவும்,
சின்னப் பிள்ளைகள் மனமகிழ்ந்து
சிரித்திட பூம்பூம் மாட்டுடனே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (15-Jun-17, 7:02 pm)
Tanglish : ellaame
பார்வை : 120

மேலே