நீ எங்கே என்று

விட்டு விட்டு துடிக்கும்
இதயம் இன்று விடாமல்
கேட்கின்றதடி!
உயிரே நீ எங்கே என்று!!,

தொட்டு தொட்டு செல்லும்
சுவாசமும் தொடர்ந்து என்னுள்
தேடுகின்றதடி!
உயிரில் கலந்த உறவே
நீ எங்கே என்று,

இமைத்து இமைத்து பார்க்கும்
கண்களும் இன்று இமைக்காமல்
கேட்கின்றதடி காட்சிகளில்
நீ எங்கே என்று,

நிழல் தந்த உன் நினைவுகளும்
இன்று சுடுகின்றதடி
என் சுகமே
நீ எங்கே என்று,

தொட்டு பேசவில்லை என்றாலும்
தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த
உயிர் ஊசலாடிக்கொண்டு
இருக்கின்றதடி!
என் உள்ளமே
நீ எங்கே என்று,


திறந்த செவிகளும் இன்று
திறக்காமல் போனதடி
என் திவ்வியமே
உன் வார்த்தைகள் எங்கே என்று,

நீ எங்கே
நீ எங்கே என்று
நித்தம் என்னை கேட்கும்
உன் நினைவுகளிடம்
எப்படி சொல்வேன்?!
இனி என் வாழ்வில்
நீ நிரந்தரமாக இல்லையென்று...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (15-Jun-17, 7:30 pm)
Tanglish : nee engae enru
பார்வை : 417

மேலே