அறம்துறந்த மழைக்காலம்

நஞ்சென்றால் அஞ்சிய பிஞ்சுகள் இன்று கெஞ்சியே மடிகின்றது
மிஞ்சிய நெஞ்சமெல்லாம் நாளும் கொஞ்சுவதுபோல் நம்மை வஞ்சிக்கின்றது...

மணல்விளையும் மாநதியினை மாற்றான் மாடிவீடுகட்ட குழிதோண்டிட
புனல்நிறைந்து கரைதொடுமா ஆங்காங்கே பிழையாய் பிரசவித்த மழைநீர்..?

பனைமரம் பற்றிய சுனைத்தேனுடன் தினைவிளைந்த மாவும் நமக்கு தெவிட்டிவிட்டதாய் நினைத்து
முனையொடிந்த ஏர்கலப்பையும் முற்றத்தில் பிணையக்கைதிபோல் துயில்கொண்டிருக்க...

அமிலமழை பெய்தாலும் ஆனந்தமாய் ஏற்றுக்கொள்வோம்
அகிலமே பிழை வருணனும் அறம்துறந்து மறைந்திட்டால்...

வினைதீர்க்க அவன்மட்டும் வருவானென்றால் வாழ்ந்திடுமே விவசாயம் இல்லையேல்
துணைதேட தொலைதூரம் அவன் சேர்ந்துவிட்டால் பசியால் புதைந்திடுமே இப் பூகோளம்...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (15-Jun-17, 7:51 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 130

மேலே