என் உயிரை மெல்ல மெல்ல எடுப்பவள் நீ 555
![](https://eluthu.com/images/loading.gif)
என்னுயிரே...
வித்தில்லாமல் என் நெஞ்சில்
விளைந்த காதல்...
நீ வெட்டாமல்
சாய்ந்ததடி மண்ணில்...
அந்திவரும் நேரம் நீயும்
வந்தாய் என் முன்னே...
இரவும் பகலும் உறக்கமின்றி
உன் நினைவுதாண்டி எனக்கு...
சிறு தூசி விழுந்தால் கலங்கும்
விழிகளை போல...
உன் சிறு வார்த்தை
என்னை கொள்ளுதடி...
நதிகள் சங்கமிக்கும்
கடலில் ஏனோ...
உன்னால் வரும் கண்ணீர்த்துளி
கலந்துவிட வழியில்லையடி...
நீ என்னை அடிக்கவுமில்லை
வெட்டவுமில்லை...
என் கண்ணீர்துளியும்
நிக்கவுமில்லை...
உன்னையே நான்
சுவாசித்தேன்...
அதனால்தான் என் உயிரை
மெல்ல மெல்ல எடுக்கிற நீ...
நீதான் சகலமும்
என்று வாழ்ந்தேன்...
மீட்டாத வீணையை போல்
நான் தெருவோரம் நிற்கிறேன் இன்று...
நான் ஜித்தானாம்.....