திமிரிய நெஞ்சில்

இவ்வானம் நித்தம் இனிது
இதனை நாங்கள் சுவாசங்களாய் சுமந்து பருகி கொள்வோம்..
பார்வைகளாய் பார்த்து தேய்த்து கொள்வோம்...
பார்த்தால் தேயாது,முகர்ந்தால் குறையாது..
வெண் குருவியாய் அது விசிறி பறக்கும்..
சில நேரம் சூன்யமாய்..
இன்னும் சில நேரம் சுபிட்ச்சமாய்..
அது வெண்மையாய்,நீலமாய்,
செந்தூரமாய் எம் கற்பனை வவுற்றில் தாவி குதிக்கும்..
மந்திரங்கள் இந் நாவில் நிஜபடுமாயின் இவ்வானை துரத்தி பிடித்திடுவோம்..
அதன் திமிரிய நெஞ்சில் எம் ஈரம் தொடுத்திடுவோம்...

எழுதியவர் : சிவசங்கர்.சி (17-Jun-17, 11:15 pm)
சேர்த்தது : சங்கர்சிவகுமார்
பார்வை : 107

மேலே