புரியாதது புதிர்
புரியாதது புதிர்.
பிறர்க்குப் புரிந்து நமக்குப் புரியாதது,
புரியாதவர்க்கு மட்டும் புதிராகும்.
எவர்க்கும் புரியாதது எல்லோர்க்கும் புதிர்.
விடுகதை புரியும்வரை புதிராக இருக்கிறது.
புரிந்தபின் எளிமையாகிவிடுகிறது.
புரிந்தபின் கிடைக்கும் எளிமையை, புரிவதன்முன் பெற வழியிருந்தால் புதிர் என்பதன் தன்மை குறையும், விடை காண்பதின் சிரமம் குறையும்.
பகுதியை முழுமையாகக் கருதினால் அது புதிராகிறது.
பகுதியை முழுமையிலிருந்து பார்த்தால் புதிர் அவிழ்கிறது