யார் அழுது யார் துயரம் தீரும்
யார் அழுது யார் துயரம் தீரும் jQuery17109707903355344432_1641083516153
யார் இழப்பை யார் கொடுக்க கூடும் ??
உன் காதில் கேட்காதோ
இவன் கதறி அழும் சோக கீதம் !!
நீ தந்த பாசம், காலத்தின் நேசம்
எல்லாமே இங்கு வேஷங்களோ ??
கங்கை நீர் கூட வற்றி போகும்
என் கண்ணீர் வற்றாமல் இதயம் வாடும்
நீ தந்த கனவு ..நீ ஊட்டிய உணவு
அவ்வெறும் நிணைவுகளோடு உருளும்
இன்றைய எனது பொழுது !!!
யார் அழுது யார் துயரம் தீரும் ??
யார் இழப்பை யார் கொடுக்க கூடும் ??
உன் காதில் கேட்காதோ
இவன் கதறி அழும் சோக கீதம் !!
இன்பங்கள் என்று நாம் நினைத்துச் சென்று
துன்பங்கள் என்ற இடம் சேர்க்கிறோம் !!!
(இன்பங்கள் என்று நாம் நினைத்துச் சென்று
துன்பங்கள் என்ற இடம் சேர்க்கிறோம் !!!)
உறவு என்பது வெறும் நீர்குமிழ் போல்
வந்த சொந்தம் பந்தம் என்பது கானல் நீர் போல்
என்னை போல் தீயவர்கள் உலவுவதனாலையே
கண்ணே ...
உன்னைப் போல் சில நல்லவர்கள் உலகிற்கு தெரியும்
நல்லவர்களை உலகிற்கு காட்டுவதற்கு
கெட்டவனாக என்னை காட்டிய இறைவனுக்கு
என் கண்ணீரில் அபிஷேகம் செய்கிறேன் ....
என்றும் என்றென்றும் ...

