மகிழ்ச்சியின் விலை --- புதுக்கவிதை
மகிழ்ச்சியின் விலை --- புதுக்கவிதை
கருவறை திறந்தவுடன் உயிரோசைக் கேட்க
மயங்கிய நிலவொன்றை உற்று நோக்கின விழிகள் !
சுமந்த வயிற்றின் காலியான இடமோ
மண்ணில் பிறந்த உருவைக் கண்டு இறையைத் தேடின !
வெளிச்சம் காணாத இருட்டறையில் பத்து மாதம்
ஆடை காத்தக் குஞ்சினை கொஞ்சிடத் தாய்மையில்
துடித்தது நெஞ்சம் ! விலையில்லா மகிழ்ச்சியில் மனம் !
புவியீர்ப்பு விசையும் நீயுட்டனும் எங்கே போனான் !
தேடிய மனத்தை விழியீர்ப்பு விசையால் காந்தமாகிக்
கவரும் பிஞ்சின் வருடலை ரசித்தன இதயம் !
காற்றில் வதங்கிய நாணலொன்று மரணத்தின் வாயிலில்
உருவான கர்ப்பத்தின் மறுவாழ்வைப் பார்த்தன . தாய்க்குத்
தெரிந்த இரகசியத்தை அசைபோடத் துவங்கியது நேரம் !
அலைகளின் ஓசையில் , ஆர்ப்பரிப்பு அடங்கிடும் வேளை
சிறைக்குள் சிறப்புடன் இருந்த மகவோ
வெளிச்சத்தைக் காண விழித்துக் கொண்ட
தருணமே இறைவனின் படைப்பின் விலை !!!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்