மன்னிக்கிறேன்
காதல்நெறி அறிய மாட்டார்,
காமத்துள் மூழ்கி கிடப்பார்..
அன்பின் மகத்துவம் அறிய மாட்டார்,
மோகத்தினில் திளைத்திருப்பார்..
அன்புள்ளம் கொண்டிருப்பார் நெஞ்சிலே வஞ்சமும், சுயநலமும் கலவாதே..
மற்றவர் துன்பம் தீர்க்க முயலுமே, தன்னிடம் இருப்பதைக் கொண்டு..
மற்றவர் துன்பம் போக்கப் பிரார்த்திக்குமே, தன்னிடம் ஏதுமில்லாவிடில்..
வான்மழை போன்றது அன்பு, என்றும் அழியாது காலமுள்ள வரை..
பணமும் அழியும்,
ஆடம்பரமும் மறையும்,
சூரியனைக் கண்ட பனித்துளி போல.
அன்பே உருவாய் தாங்கிடும் நிலமகள் சிறிது நடுக்குற்றால்,
பணக்காரனும், ஏழையும் ஒன்றென நிற்பார் தெருவிலே..
ஆழியலை மேலெழுந்தாலும் மீண்டும் விழுவது கடலிலே, என்பதொப்ப பணம், ஆடம்பரமென மேலெழுந்த மனிதனோ புதைவது மண்ணிலே,
அல்லது எரிவது நெருப்பிலே..
ஆன்மாவின் சட்டையாகிய இவ்வுடலுக்காக இம்மனிதனும் எத்தனை கஷ்டப்படுகிறான் கிழியப் போகிறதையெண்ணாமல்.
பஞ்சணை மீதினிலே துயின்றாலும்,
கட்டந்தரையினிலே துயின்றாலும்,
ஒன்றென்று அறியா ஆடம்பர உலகிலே அன்பின் வாசனை வீசமென எதிர்ப்பார்ப்பதும் வீணே...
கலப்படமான உலகில் கலப்படமற்ற அன்பில் இன்னா செய்தாரை இன்முகத்தோடு மன்னிக்கிறேன் பழியுணர்வுக்கு அகப்படாமலே...