அடுப்பு
மண் அடுப்பு கல்அடுப்பு பலஅடுப்பு பார்த்ததுண்டு
கேஸ் அடுப்பு வந்தபின்னே எல்லாமே வில்லங்கந்தான்
பொறுக்கிய சுல்லியோட வெறகையும் சேத்துவச்சு
அம்மாச்சி சமைச்சதோட வாசனையின்னும் போகலையே
குளிர்கால ஊருக்குள்ளே சுடுதண்ணி கொதிச்சிருக்கும்
பாட்டியோட குடிசைவீட்டில் வறக்காப்பி சுகம்கொடுக்கும்
பெரியம்மா சுட்டதோசை எண்ணிஎண்ணி சாப்பிட்டேனே
சுவையான காரணந்தான் அடுப்பவச்சா ஆளவச்சா
அத்தையம்மா வீட்டில்செஞ்ச கோழிக்கறி அடடடடா
சித்திவச்ச வெஞ்சனந்தான் நாக்கில்எச்சி ஊறுதடா
அம்மாவை பத்திச்சொல்ல ஒருவரியில் முடியாதுடா
மனைவியொருத்தி வந்தபின்னே அத்தனையும் அவள்சமையலிலே
அடுப்புக்கு என்னவென்று கவியெழுத யோசிக்க
அடுப்பின் வழிபிறக்கும் சமையல் கவிதையாககொட்டுதடா
அடுத்தடுத்த கவிவழியே அடுப்பின்பெருமை அறிந்துகொள்வேன்
விடுப்பின்று இருந்ததனால் தினக்கவிதை பதிந்துவிட்டேன்