ஆதலினால் காதலிப்போம்

பிடிச்ச மனசோடு வாழ இங்க வழி இல்லை.
எரிச்சி கொல்லும் இந்த சமுதாயம் சரி இல்லை.
மனங்கள் இணைந்தாலே மரணதண்டணை.
மதம் கொண்ட மனிதருக்குள்
மட்டமான சிந்தனை.
சாதி என்னும் தீக்குள்ளே கனவெல்லாம் கருகுதே.
பாதியில பல வாழ்க்கை மண்ணுக்குள் புதையுதே..
அறிவற்ற சில பேரால்
பல
மனசு சிதையுது.
அழிக்கும் அரக்கனின் இரக்கம் இல்லா சிதை அது.
அடிமை விலங்க எல்லாம் உடைத்து விட
அன்பு விதை எங்கும் விதைத்து விட
சாதிமத பேதத்தை சாக்கடையில் வீசுவோம்.
வாழ்கின்ற காலம் வரை அன்பில் கலந்து பேசுவோம்.

எழுதியவர் : கு.தமயந்தி (26-Jun-17, 9:52 am)
சேர்த்தது : குதமயந்தி
பார்வை : 77

மேலே