இளவேனில்

மெல்ல மெல்ல வியர்வை எட்டிப்பார்க்கும்
அதிகாலைப் பனி செடிவிட்டு
அழுகையுடன் விலகி ஓடும்
நாள்முழுதும் மிதமாக இருக்கும்
அந்த சூரியனின் சிரிப்பு..
செய்யும் செயல்கள்
சிறப்பாக முடிவுறும் இந்த இதமான காலநிலையால்
பள்ளிக்கூடம் விடுமுறை விட்டுவிடும்
மழலைகளை உற்சாகம் தொட்டுவிடும்
எப்போதாவது ஒரு மழை பெய்தால்
மகிழ்ச்சி எல்லோருக்கும் தூறலாக பகிர்ந்தளிக்கப்படும்
பச்சைத் தாவரங்கள் தன் நிறமிழக்கத் துவங்கும்
ஆடித்திரிந்த பறவையும் வேட்டைக்கார விலங்கும்
கோடையிலிருந்து தன்னைத் தானே காப்பாற்ற‌
ஓடையோரம் தேடி அலையும்
காட்டில் காணச்சென்ற சிறாருக்கும்
இலவசமாய் அலட்டலின்றி காட்சி கொடுக்கும்
மொத்ததில் இளவேனில்
இளமைத் துள்ளலுடன் இன்னிசைக்கும்
அதற்கு ஏற்றாற்போல
இளவேனில் மலர்கள் புன்னகைக்கும்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (26-Jun-17, 10:26 am)
Tanglish : elavenil
பார்வை : 355

மேலே