குறுக்கீடு
குறுக்கீடுகளின் தொல்லை
அதிகமாகிவிட்டது.
வண்டிகள்; வாகனங்கள்...
மனிதர்கள்.. நாய்கள்..
சத்தமாகவும், மொத்தமாகவும்,
யுத்தமாகவும், ரத்தமாகவும்
சில நேரங்களில்
முத்தமாகவும்
குறுக்கிடுகின்றன.
வணிகர்களுக்குப் பரிந்தும்
அதிகாரத்துக்குப் பயந்தும்
வார்த்தைகள் குறுக்கிடுகின்றன.
அவனவன் வேலையை
ஒழுங்காய் பார்க்காமல்
அடுத்தவர் வழியில்
குறுக்கிடுகிறான்கள்.
அசுர, சுர வேகங்கள்
ஆபத்து விபத்துகள்
எதை நோக்கிய
பயணம் இவை.
மரணப் புள்ளியில்
உறையும் வாழ்வை
ரணமாக்குகிறீர்கள்.
குறுக்கீடு என்பது
அறியாமையின் குறியீடு.
குறுக்கீடு என்பது
மடமையின் வெளிப்பாடு.
குறுக்கீடு என்பது
அதிகாரத்தின் ஏற்பாடு.
குறுக்கீடு என்பது
வாழ்வின் முரண்பாடு.
வருத்தத்தின் உடன்பாடு.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
