உனக்கு மட்டும்
உன் வாள்
முள்மரம் வெட்டவில்லை
உள்மனம் அறுத்தது.
எந்தக் கன்றைக் கொண்டேன்?
எந்தப் புறாவைக் காயப்படுத்தினேன்?
உன் வாழ்வின் வசந்தத்துக்கு
அட்சதை தூவினேன்.
கற்களை எறிந்தாய் நீ.
உன் வெற்றியில்
என் பாசமும்
பங்கு பெற்றிருக்கிறது.
உன் வளர்ச்சியும், மலர்ச்சியும்
எங்கள் குதூகலமாய்
கொண்டாட்டமாய் இருந்தது.
என் நிழலில் இருந்த நினைவுகளை
எந்த ரப்பர் அழித்தது.
உன் மனக்கோணல்
எதையும்
சரியாய் பார்க்க மறுத்தது.
வளர்ச்சி
மலர்ச்சியும், மகிழ்ச்சியும்
தருவதற்குப் பதில்
திமிர் தந்தது.
நிமிரலாம்.
திமிரலாமா?