பாகுபலி

பாகுபலி

பாகுபலியை பார்த்தே
ஆகவேண்டு மென்றார்கள்..
ஆசை மகன்கள்..
ஆசையை தூண்டியவளும்
அமைதியாய் அடுப்பாங்கரையில்...

மூன்று பேருக்கும்
முன்னூற்று அறுபது ரூபாய்..
‘ஆன் லைனில்’ இருக்கையை தேர்ந்தெடுத்தால்
நூற்றிமுப்பது கூடுதலாக
‘சேவைவரி கட்டணம்’..

7 மணி காட்சிக்கு
6 மணிக்கே சென்று
அங்கேயே வாங்கிக்கொள்ளலாம் என்றேன்..
நூற்றிமுப்பது மிச்சம் என்பது என் கணக்கு..
‘மால்’ சுற்றிப்பார்க்கலாம் என்பது அவர்கள் கணக்கு..

என்பது வயதில் சுடுகாடு செல்ல..
எழுபது வயதில் சாகவேண்டும் போல..
அத்துனை வாகன நெருசல்..
அரைமணி நேரத்திற்கு முன்னர் தான்
செல்லமுடிந்தது...

பிள்ளைகளின் தொல்லை
தின்பண்டங்கள் வேண்டுமென்று...
நாம் எடுத்துச் செல்வதை அனுமதிப்பதில்லை...
அத்தனையும் வியாபார உத்தி..
கழுத்தை கொடுத்துவிட்டோம் பிறகென்ன..?

விலைப் பட்டியலை பார்த்தால்..
வீங்கிப்போனது இதயம்...

சமோசா தொண்ணூறு ரூபாய்...
நெய்யில் செய்ய்யப்பட்டதோ..?
‘பாப்கான்’ இருநூற்றி பத்து ரூபாய்
பத்து ரூபாய் கூட பெறாதே..?
அடேய்...
அயோக்கிய பசங்களா..
நூறுநாள் வேலை திட்டத்தின்
ஒரு நாள் சம்பளமே அதுதாண்டா...!

பிள்ளைகள் கதற..
மனைவி கொதற..
நான் அழுதுகொண்டே கொடுத்திட்டேன்...
இரு பிள்ளைகளும் இரண்டு வேண்டுமா..
இடுப்பு வலி என்னவென்று..
அப்பொழுதான் உணர ஆரம்பித்தேன்..

விஷ சக்கரை தண்ணி..
அதான் வெளிநாட்டு குளிர்பானம்..
நூற்றித்தொன்னூறு ரூபாய்...

எங்கப்பன் கரும்பு வித்த காசை..
நான் கரியாக்கினேன்..
என் காசை என் மகன்
விஷமாக்குகிறான்..
அறுநூற்றி முப்பது ரூபாய்..
ஆக மொத்தம்...

ஆயிரம் கோடி வசூல் தெரியும் நமக்கு..
பாப்கான் வித்த வசூல் தெரிவதில்லை..

படம் பார்க்க மனம் செல்லவேயில்லை..
ஆயிரம் ரூபாய் என்பது..
அத்துனை வலியை கொடுத்திட்டது...
மூன்றுநாள் சம்பளம்..
என்பது சும்மாவா...?

பிள்ளைகளின் ஆசைகளில்..
காயம்பட்டு சந்தோசம் அடைகின்றோம்..
உள்காயம் வெளியே தெரிவதேயில்லை..

படம் முடிந்து ‘பைக்கை’ எடுக்கும் வேளையில்..
அங்கேயும் ஒரு வசூல்..
என்பது ரூபாய் என்றான்..
இருப்பதோ எழுபது ரூபாய்..
இருபத்தெட்டு பல்லு தெரிய..
“இருப்பது அவ்வளவுதாண்ணே..” என்றேன்.
அண்ணனுக்கும் என் அவஸ்தை
புரிந்திருக்கும் போல..
பத்து பல்லை காட்டி
“போங்க..” என்றார்...
கண்டிப்பாக என் சாதிக்காரனாய் தான் இருப்பார்..?

பக்கத்து வீட்டு ‘பெரிசு..’
பாகுபலி கதையை கேட்டார்கள்..
படம் பார்த்தால் தானே தெரியும் கதை...
என் வலியோ...
அத விட பெரிசு...
தலைவலிக்கிறது..
நாளைக்கு சொல்றேன்..
என்று சொல்லிவிட்டு
மூத்த மகனிடம் பாகுபலி கதையை
கேட்க ஆரம்பித்தேன் இலவசமாக...

சத்தியமாக புரியவில்லை...
அவன் மழலை பேச்சில்...
யாராவது பாகுபலி கதையைச் சொல்லுங்களே..!

***************
சிகுவரா
16/6/2017

எழுதியவர் : சிகுவரா (27-Jun-17, 12:17 pm)
சேர்த்தது : சிகுவரா
பார்வை : 310

மேலே